மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதேசத்தில் தூக்கிட்டு கொண்ட நிலையில் இன்று சனிக்கிழமை காலை முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கோட்டைக்கல்லாறு பிரதான வீதியை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கிருபைராஜா 62 வயது நபர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் வீட்டின் மேல்மாடி கூரைக்கு அமைக்கப்பட்ட இரும்பு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

மேற்படி சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும்  மேலதிக விசாரணைகளினை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours