(எஸ்.கார்த்திகேசு)



அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 11 மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவின் உத்தியோகத்தர் கே.தயாபரனின் ஒழுங்கமைப்பில்  வெள்ளிக்கிழமை (16) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ் மீன்பிடி வலைகளானது மீன்பிடி அமைச்சின் ஊடாக கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுதாகரனின் ஆலோசனைக்கு அமைவாக வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பிய மீனவர்களுக்கு தமது மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் நோக்குடன் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா கணக்காளர் வி.அரசரெத்தினம் சமூர்த்தி தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் திருமதி பரிமளவாணி சில்வெஸ்டர் திருக்கோவில் பிரதேச நீரியல் வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.அபராஜீதன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours