(காரைதீவு  சகா.)

கிழக்குமாகாணத்தில் கூடைப்பந்தாட்ட இரண்டுநாள் பயிற்சி முகாம் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கடந்த வெள்ளி சனி தினங்களில் நடைபெற்றது.

இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளன அங்கீகாரத்துடன் மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடுசெய்த இப்பயிற்சி முகாமில் இலங்கைஅணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் அஜித் குருப்பு வளவாளராகக்கலந்துகொண்டார்.

திருகோணமலை அம்பாறை மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை மாவட்டங்களைச்சேர்ந்த 52 பேர் பயிற்சிமுகாமில் பங்கேற்றனர்.

இலங்கை கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் சம்மேளனத் தலைவர் அஜித்குருப்பு செயலாளர் சிவசக்தி செல்வராஜா உபசெயலாளர் சத்ரு றொட்றிகோ மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் கே.இராஜேந்திரா செயலாளர் கே.ஜே.பிரியேந்திரன் கூடைப்பந்தாட்ட வீரர் வைத்தியகலாநிதி சுந்தரலிங்கம் டிலக்குமார் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டார்கள்.

பயிற்சிமுகாம் நிறைவாக கூடைப்பந்தாட்ட கழகங்களுக்கான திறந்த கூடைப்பந்தாட்ட சாம்பியன்சிப் சுற்றுப்போட்டியொன்றும் நேற்று நடைபெற்றது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours