காணிப்பதிவகத்தின் கல்முனை மாவட்ட பதிவக காரியாலயம் 14 நாட்கள் மூடப்பட்டுள்ளது.
அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 28. 04. 2021 முதல் எதிர்வரும் 11. 05. 2021 வரை அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
கல்முனை காணிப்பதிவகத்தில் பணியாற்றிய 25 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத் தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அந்த பணியகத்திற்கு கடந்த இரு வாரங்களுக்குள் சென்றவர்கள் சுயமாகவே தனிமைப்பட்டு கொள்ளுங்கள்.தங்கள் பகுதி பொதுச் சுகாதார உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளுங்கள் என கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் அறிவித்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours