நூருல் ஹுதா உமர்

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 33 வது இளைஞர் விளையாட்டு போட்டியினை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டி அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம்.ஸமீலுல் இலாஹி தலைமையில் அக்கரைப்பற்று பொது மைதானத்தில் நடைபெற்றது.

இதற்கமைய இறுதிப் போட்டிக்கு பாயிஸா இளைஞர் கழகமும் ஹிஜ்ரா இளைஞர் கழகமும் தகுதி பெற்றன.  இதன் போது ஹிஜ்ரா இளைஞர் கழகம் குறித்த நேரத்தினுள் 02 கோல்களும் பாயிஸா இளைஞர் கழகம் 01 கோலும் பெற்றன. இதற்கமைய ஹிஜ்ரா இளைஞர் கழகம்  வெற்றி பெற்று மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிகழ்வில்  அக்கரைப்பற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எல்.பியோத் முஹைமீன், அக்கரைப்பற்று இளைஞர் சம்மேளனத் தலைவர் எம்.எம்.றுக்சான் உட்பட பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours