(நூருல் ஹுதா உமர்)
சாய்ந்தமருதை சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அஸ்மியா அஷ்ரப் எழுதிய "நிழலாய் அவள்" சிறுகதை தொகுப்பு நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (11) மாலை சாய்ந்தமருது கமு / கமு/ றியாளுள் ஜன்னாஹ் வித்தியாலய மண்டப அரங்கில் சாய்ந்தமருது கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ. எம். அஷ்ரபின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், இலங்கை பொதுசேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். மேலும் இந்நிகழ்வில் முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி கலாபூசணம் ஏ.பீர்முஹம்மத், கமு / கமு/ றியாளுள் ஜன்னாஹ் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். சம்சுதீன், மருதம் கலைக்கூடல் தலைவர் அஸ்வான் கலைஞர் மௌலானா, சாய்ந்தமருது கலாச்சார அதிகார சபையின் உறுப்பினர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Post A Comment:
0 comments so far,add yours