(வி.ரி.சகாதேவராஜா)

ஏப்ரல் 21 இல் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாவது வருட நினைவாக இடம்பெற்ற ஒன்றிணைந்த பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு கோமாரி தேவசபையில் நேற்று(21)மாலை நடைபெற்றது.
பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு தேவாலய பிரதமகுரு வண.பிதா.சுலக்ஷன் அடிகளார் தலைமையில்  இடம்பெற்றது.

அண்மையில் மறைந்த மன்னர் ஆயர் வண. இராயப்பு ஜோசப் அடிகளாரிறகு  இருநிமிடஅஞ்சலி செலுத்தப்பட்டது.

பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரனும் கலந்து சிறப்பித்தார்.
மதத்தலைவர்களின் நினைவேந்தல் உரை மற்றும் மத அனுஸ்டானங்களுடன் ஆரம்பமான நிகழ்வில் இடம்பெற்ற மனிதநேயமற்ற செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் நமது நாட்டில் இதுபோன்ற துரதிஸ்ட சம்பவங்கள் இடம்பெறாது பாதுகாக்க அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனைகள் நடைபெற்றதுடன் மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வுகளில் சர்வமத பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours