கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதேசத்தில் குடும்பஸ்தர் குடும்பத்தகராறு காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

காஞ்சிரங்குடா,கன்னங்குடா பிரதேசத்தைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை கணேசநாதன்(43) என்பவர் நேற்று முன்தினம் தன்து வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அவரின் உறவினர்கள் தேட ஆரம்பித்த போது அருகில் உள்ள வயல்பிர்தேசத்தில் உள்ள மரத்தில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours