இலங்கையில் கொவிட் 19 தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னைய இரண்டு அலைகளையும் விடவும் இம் மூன்றாவது அலையானது கிழக்கு மாகாணத்தில் வெகுவான பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. மாவட்டங்களில் தினசரி கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக திருகோணமலை 12, கந்தளாய் 9, கிண்ணியா 5, மூதூர் 4, ஹோமரன்கடவெல 3, சேருவாவில 3, குறிஞ்சாக்கேணி 2, குச்சவெளி 1, உப்புவெளி 1 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours