இலங்கையில் மேலும் 42 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1405 ஆக உயர்ந்துள்ளது.

மே மாதம் 14ம் திகதி முதல் இன்றைய தினம் வரையில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று ஆறு கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், 14ம் திகதி முதல் 28ம் திகதி வரையில் 36 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours