அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதை தெரிவித்தார்.
கொரோனா பரவலை அடுத்து நாட்டில் கடுமையான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் கட்டுப்பட்டுள்ளது.
எனினும் இந்த தடையை மீறி குறித்த பேருந்து, இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நேற்று இரவு (30) தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Post A Comment:
0 comments so far,add yours