நாடும் முழு உலகமும் கொரோனா வைரஸ் தொற்றிருந்து விடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி சகல வணக்கஸ்தலங்களிலும் இன்று(08) மாலை 5.46 மணிக்கு விசேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவுக்கமைய மேற்கொள்ளப்படவுள்ள இப்பூஜை வேளையில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலில் இருந்தவாறே பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபட வேண்டுமென்றும் இலங்கையை விட்டும உலகத்தை விட்டும் கொரோனா நீங்க வேண்டும்மென்றும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் சுகமடைய வேண்டும்இ சகலரும் வளமான வாழ்க்கையப் பெறவேண்டும் என்று இறைவனை மனதார ஒருமித்துப் பிரார்த்திக்குமாறு சமய கிரியைகள் புத்தசாசன மத விவகார அமைச்சின் இந்து சமய விவகார இணைப்பாளரும் சர்வமத இந்து பீட செயலாளருமான கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
சகல ஆலயங்களில் ஹோமம்!
உலக மக்களின் நன்மையையும் இலங்கை வாழ் மக்களின் நன்மையையும் வேண்டிச் சர்வமதப் பிரார்த்தனை இன்று நடாதத் இந்துசமய கலாசார திணைக்களம் கேட்டுள்ளது.
தற்போது உலகை உலுக்கிவரும் கோவிட் – 19 தொற்றுப் பரம்பல் நீங்கி சுபீட்சமானதொரு வாழ்வு மலர உலக மக்களின் நன்மையையும் இலங்கை வாழ் மக்களின் நன்மையையும் வேண்டிச் சர்வமதப் பிரார்த்தனையினை ஒரே நேரத்தில் இன்று 08.05.2021 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப. 5.46 மணிக்கு இலங்கைத் திருநாட்டில் உள்ள அனைத்து சமயத் தலங்களிலும் நிகழ்த்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் திருநாட்டின் மாண்புமிகு பிரதமர் அவர்களது எண்ணத்தில் உதித்த இந்தத் தார்மீகச் சிந்தனையை புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நாடாளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்களைச் சம்பந்தப்பட்ட திணைக்களங்களிடம் அறிவுறுத்தியுள்ளது.
இதன் பிரகாரம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கையில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் இத்தருணத்தில் விசேட வழிபாட்டினை மேற்கொள்ளுமாறும் இந்த விசேட வழிபாட்டில் இயன்றளவிற்கு மஹாம்ருத்யுஞ்ஜய யாக வழிபாட்டினையும் நிகழ்த்தி வழிபாடாற்றுமாறும் இந்த விசேட வழிபாட்டினை ஆலய அறங்காவலர் மற்றும் கிரியைகளை நிறைவேற்றும் சிவாசாரியார்களோடு மட்டுப்படுத்தி ஆற்றிக்கொள்ளுமாறும் இந்து மக்கள் அனைவரும் தங்கள் வதிவிடங்களில் இருந்தபடியே இத்தருணத்தில் விளக்கேற்றி மானசீகமாகப் பிரார்த்தனையை நிறைவேற்றுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறது என திணைக்களப்பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours