(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையாளராக ஆறு ஆண்டகள் பணியற்றிய இரா.சசீலன் வட மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளராக இடமாற்றம் பெற்று எதிர்வரும் 4ம் திகதி செல்லவுள்ள நிலையில் அவருக்கான பிரிவுபசார நிகழ்வினை மட்டு மாவட்ட செயலகத்தில் இன்று மாலை 4.30மணியளவில் அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
இவர் இலங்கை அரச சேவையில் 2009ம் ஆண்டு முகாமைத்துவ உதவியாளராக இணைந்து கொண்டு மாத்தறை யாழ்பாணம் கொழும்பு என பல பகுதிகளிலும் பணியாற்றி வந்தகாலத்தில் இலங்கை நிர்வாக சேவையின் திறந்த போட்டிப்பரீச்சையில் 2012ம் ஆண்டு சித்தியடைந்து தனது பயிற்சியை முடித்து விட்டு தேர்தல் திணைக்களத்தின் உதவி தேர்தல் ஆணையாளராக இணைந்து ஆறு ஆண்டுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தேர்தல்களை சிறப்பாக மூன்று ஆரசாங்க அதிபர்களுடன் பணியாற்றியுள்ளார்.
தேர்தல் திணைக்களத்தில் எல்லோரிடமும் அன்புடன் பழகி சிறப்பாக சேவையாற்றியிருந்தமை இங்கு எல்லோராலும் நினைவு கூறப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours