நூருல் ஹுதா உமர்


சேர் பொன்னம்பலம் ராமநாதன் தொடங்கி பிரபாகரன் வரைக்கும் காலத்துக்கு காலம் வந்த தமிழ் தலைமைகள் எந்த வகையான கழுத்தறிப்புகளை முஸ்லிம் சமுகத்திற்கு செய்தார்களோ அதையே சாணக்கியனும் செய்கிறார். இதை பார்த்து வியந்து பேசவோ ஆச்சரியப்படவோ வேண்டியதில்லை என்று இழப்பீட்டுக்கான  ஆய்வு மையத்தின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர் தெரிவித்தார். அக்கரைப்பற்று இழப்பீட்டுக்கான ஆய்வு மைய காரியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த நிர்வாகிகள் தேர்வு நடைபெற்ற பின்னர் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் தனியான இனம் என்பதை 85களில் தமிழ் மொழி மாநிலமாக ஆரம்பித்த போராட்டம் 90களில் தமிழ் இனத்துக்கான போராட்டமாக மாற்றமடைந்த போதே உணர்ந்து கொண்டோம். ஆயிரக்காணக்கான முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் ஈழம் வேண்டி தமது உயிரை மாய்த்த போதும் இரவோடு இரவாக வடக்கு முஸ்லீம்களை அகதிகளாக வெளியேற்றி துரோகமிழத்தனர். பள்ளிகளில் குண்டுகளை வீசி நுற்றுக் கணக்கான உயிர்களை காவு கொண்டீர்கள் இதில் கருணா பிள்ளையான் பிரபாகரன் என பேதமில்லாமல் கழுத்தறுப்பு செய்தனர்.

ஏறாவூரில் அழிஞ்சு பொத்தானையில் மூதூரில் அக்கரைப்பற்று வயல்களில் முஸ்லீம்களை கொன்று குவித்ததை நாங்கள் மறந்து போக வில்லை. கர்ப்பிணி தாய்மார்கள் என்றும் பார்க்காமல் வயிற்றிலிருந்த சிசுக்களை வெளியில் எடுத்து கொலை செய்த படுபாதகம் எங்கும் நிகழ்ந்திருக்குமா? இது தங்களின் கோசத்தின் பின்னால் மட்டை தூக்கிய தேநீர் உசார் முஸ்லிம் இளைஞனுக்கோ  அரசியல்வாதிகளுக்கோ தெரிய வாய்ப்புக்கள் இல்லை நாடு கடந்த தமிழ் ஈழத்தின் ஏற்பாட்டில் P to P  வரைக்குமான நடை பவணியின் போது அட்டாளைச்சேனையில் ஜனாசா எதிர்ப்பு கோசமும் காரைதீவில் வடக்கு கிழக்கு இணைப்பு கோசமும் வருகின்ற போது  சொன்னோம் ஆட்டுக்கு கொத்தை காட்டி அழைத்து செல்கிறார்கள் எங்கோ ஒரு இடத்தில் அறுக்கப்பட போகிறார்கள் என்று அதுவே நடந்திருக்கிறது.

கல்முனையில் தனியான RDHS இருப்பது முஸ்லீம்களுக்கு மட்டுமா? மட்டக்களப்பில் தனியான கல்வி வலயம் இருப்பதால் தங்களது இனத்துக்கு ஏதும் நஷ்டம் ஏற்படுகின்றதா? ஐந்து கிலோ மீட்டரில் வைத்தியசாலை இருந்தால் தமிழ் இனம் ஏன் எதிர்க்க வேண்டும்? இவையெல்லாம் உருவாக பிரபாகரனும் அவர் ஏந்தி இருந்த ஆயுதமும் தான் காரணம் என்பதை சாணக்கியன் புரிந்து கொள்ள வேண்டும்.

சிங்கள இனத்துடன் முஸ்லீம்களை பிரித்தாளும் பணியை டயஸ்போராக்கள் மிக தெளிவாக செய்திருக்கிறார்கள் அதற்கு எங்களது தலைவர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த நல்லாட்சியின் போது ரவூப் ஹக்கீமும் சம்பந்தனும் அதிகாரத்தில் இருந்த போது கல்முனைக்கான தீர்வு எட்டப்பட வில்லை ஏன்?இன்னும் வெற்று அரசியல் சுயநலத்துக்காக மக்களை சூடாக்கி வைத்திருக்க பார்க்கிறீர்கள்? காலம் சாணக்கியனை மட்டு மல்ல அனைத்து நிஜங்களையும் தோலுரித்து காட்டும் மிகப்பெரிய சக்தி மிக்கது என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours