(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)


மட்டக்களப்பு மியான்குளப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு.

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில் வாழைச்சேனை பொலிஸ் பிாிவிற்குட்பட்ட மியான்குளப் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் ஒன்று வியாழக்கிழமை (06) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த அதி சொகுசு தனியர் பஸ் வண்டி உரிமையாளரும்,மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 2009ம் வருட உயர்தர வகுப்பு மாணவருமான  31 வயதுடைய பரமேஸ்வரன் தனுஜன், 31 வயதுடைய டினேகா என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இவ்விருவரும் காரில் பயணித்துள்ள நிலையில் குறித்த விபத்து வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.இதனையடுத்து  வீதிச் சோதனையில் ஈடுபட்டுவரும்  இராணுவத்தினர் உயிரிழந்த நிலையில்  இருவரையும் மீட்டெடுத்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்  அனுமதித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours