(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
எது எவ்வாறு இருப்பினும் மட்டக்களப்பு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உடனுக்குடன் செயலணி கூட்டப்பட்டு காலத்தின் தேவைக்கு ஏற்றாற்போல் சிறந்த தீர்மானங்களை மேற்கொண்டு மக்களை இத்தொற்றிலிருந்து மீட்பதற்கான பல்வேறுபட்ட பணிகளை சுகாதாரத்துறையினர், முப்படையினர் மற்றும் ஏனைய திணைக்களகங்களுடன் இணைந்து இரவு பகலாக மேற்கொண்டுவருகின்றனர்.
அதற்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் வறுமையால் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மாவட்ட கொவிட் செயலணியின் தலைவரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 10,000/= ரூபாய் பெறுமதியான உலர் உணவு விநியோகத்தினை துரிதகதியில் மேற்கொண்டு வருகின்றனர்.




Post A Comment:
0 comments so far,add yours