( ஆ.நிதாகரன்) - உலகம் முழுவதிலும் மே 09 சர்வதேச அன்னையர் தினமாக கொண்டாடப்படுகின்றது.
- "தாயிற்சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை"
- தாய் என்பவர்கள் அனைத்து உயிரினங்களுக்கும் முதல் உறவாக இருக்கிறார்கள். பறவைகள், விலங்குகள், பூச்சிகள் இவை எல்லாவற்றிற்கும் மற்ற எந்த உறவுகளும் இல்லையென்றால் நிச்சயமாக அதிக உயிரினங்கள் தாயால் தான் வளர்க்கப்படுகின்றன. தாயின் அரவணைப்பு என்பது ஒரு குழந்தைக்கு மருந்து போன்றது. மேலும் அம்மாக்கள் எப்போதும் தியாகம் செய்பவர்களாக இருக்கிறார்கள்.
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்கிறது கொன்றை வேந்தன். ஒரு தாயின் சிறப்பைப் போற்ற, எவ்வளவு பாடல்கள் இயற்றினாலும் , புகழுரை தந்தாலும் எதுவும் போதாது. அவள் தன் குழந்தையைப் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, வேறு எதிலும் இல்லை. அவர்கள் எவ்வளவு வயதானாலும் தன் அன்னைக்கு குழந்தைகள் தாம். அவள் தன்னலம் கருதாது தன் எல்லா சக்தியும் கொண்டு அக்குழந்தையை மிகச் சிறப்பாக வளர்க்க என்ன பாடு படுகிறாள் ? வள்ளுவர் ஒரு தாயின் மகிழ்ச்சி , அவள் குழந்தையைப் பெற்ற தருணத்தைவிட அவன் சான்றோன் எனப் பலரால் பாராட்டப்படும்போதுதான் பல மடங்காகிறது என்றார்.
- அவர்கள் எப்போதும் தனது குழந்தைக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவர்களாக உள்ளனர்.தாயின் மனம் நோகும்படி வாழ்க்கையில் நாம் நடந்துகொள்ளக்கூடாது
- ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் "
- குறள் 69 அன்னையின் சிறப்பை, உயர்வை விளக்கும் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் ஏராளம் உள்ளன. உலகில் எவ்வளவு பெரிய சாதனைகளை நாம் படைத்தாலும் , பலபேரிடம் வாழ்த்து, ஆசி பெற்றலாலும் நம் அம்மாவிடம் நாம் பெறும் அன்பும் ஆசியும் மகிழ்ச்சியும் உலகில் எங்கும் கிடைக்காது. "..தெய்வம் பூமிக்கு வருவதில்லை, தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்... " என்ற திரைப்பாடல் வரிகள் எம் நினைவிற்கு வருகின்றன. - அப்படிப்பட்ட மேன்மை பொருந்திய அவர்களுக்கான ஒரு தினமாகத்தான் அன்னையர் தினம் உள்ளது. எனவே இந்த நாளில் நாம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மிக முக்கியமானதாகும்.
Back To Top
Post A Comment:
0 comments so far,add yours