(க.விஜயரெத்தினம்)


மாவடிவேம்பில் வாகன விபத்து.தனியாருக்கு சொந்தமான வேன்வண்டி நொறுங்கியது.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - மாவடிவேம்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தனியாருக்கு சொந்தமான வேன் வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.ஓட்டமாவடி பகுதியில் இருந்து ஏறாவூர் நோக்கி சென்ற வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

புதன்கிழமை(12)இரவு 09.15 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.அதிவேகமும் சாரதியின் தூக்க கலக்கமுமே இவ் விபத்திற்கு காரணமாகவிருந்துள்ளது என தெரிய வந்துள்ளது.வேகக் கட்டுப்பாட்டை இழந்து வேன் வண்டி வீதியோர மின் கம்பத்தில் மோதியுள்ளது.
எனினும் வான் வண்டியில் பயணித்த இருவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours