வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட புளியடி வீதி பாலமுனை மண்டூர் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான சங்கரப்பிள்ளை தேவமலர் (47) என்பவரே தனது வீட்டின் அறையில் தனக்குத்தாகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இன்று (28) மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது மகளுடன் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் வீட்டின் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் கதவினை உடைத்து உட்சென்று பார்தபோது குறித்த  பெண் தூக்கில் தொங்கிய நிலையிர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான்  அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours