கல்முனைப்பிராந்தியத்துக்குட் பட்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் (23) இருபது(20) பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
குறித்த குடும்பத்தின் தலைவர் ஏலவே இனங்காணப்பட்டு கடந்த 3தினங்களாக பாலமுனை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருகின்ற அதேவேளை நேற்று குடும்பத்தினரைச் சோதனை செய்தபொது இது உறுதியானது. அவர்களில் மூவர் பாலமுனைக்கும் ஒருவர் மருதமுனைக்கும் அனுப்பப்பட்டனர்.
இத்துடன் காரைதீவு சுகாதாரப்பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை முதல்தடவையாக 100ஜத் தாண்டியுள்ளது. அதாவது நேற்றுடன் இத்தொகை 103ஆக உயர்ந்துள்ளது. எனினும் அவர்களில் 97பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். ஆக தற்சமயம் 06பேர் வைத்தியசாலைகளில் உள்ளனர்.

Post A Comment:
0 comments so far,add yours