மாளிகைக்காடு நிருபர்


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் இன்று முதல் பதினான்கு நாட்களுக்கு சுயதனிமை படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (26) புதன் கிழமை, பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் அயலவர் ஒருவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் அவரை தனது வாகனத்தின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார்.

குறிப்பிட்ட சுகயீனமான நபர் கொறோனா தொற்றாளராக இனம் காணப்பட்டமையினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் பாராளுமன்ற உறுப்பினரும் சுயதனிமைப் படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இவ் இக்கட்டான சூழ்நிலையின் தாற்பரியங்களை அறிந்து மக்கள் பொறுப்புடன் செயற்படுவது சாலச்சிறந்தது என மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours