காரைதீவு  சகா


முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய உற்சவம் நேற்று(10) அதிகாலை பாக்குத்தெண்டலுன் ஆரம்பமாகியது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பக்தர்கள் ஆலயத்துக்கு வருகின்றமை  தடைசெய்யப்பட்டுள்ளதோடு ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆலய சம்பிரதாய கிரியைகளை நடத்த அனுமதிக்கப்பட்டதோடு  மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணி இந்த ஆலய கிரியைகளை மேற்கொள்ள உள்ளனர்.

எதிர்வரும் 17ஆம்திகதி கதவுதிறத்தலுடன் குளிர்த்திச்சடங்குகள் ஆரம்பமாகி 25அதிகாலை நிறைவுறும்.
அந்த வகையில் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான பாக்குத்தெண்டல் உற்சவம் நேற்று அதிகாலை சிறப்பாக இடம்பெற்றது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours