(-க.விஜயரெத்தினம்)
நாடுபூராகவும் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளாதாக இன்று வியாழக்கிழமை(27) ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி(வயது-44) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் முன்னைய பகையை வைத்துக்கொண்டு இரு சாராரும் கைகலப்பில் ஈடுபட்ட போது தேவகி என்பவர் இரும்பு கம்பியால் தலையில் தாக்கப்பட்ட நிலையில் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours