- எஸ்.சதீஸ் 





மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக முறையில் அனுமதிப் பத்திரம் இல்லாது முதிரை மரம் வெட்டிய நபர் ஒருவரும், மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமியின் ஆலோசனைக்கமைய இன்று திங்கட்கிழமை (04) அதிகாலை, உதவி பொலிஸ் பரிசோதகர் விக்கிரமசிங்கே, பொலிஸ் உத்தியோகத்தர்களான டினேஸ் PC 8656, லோஜிதன் PC 8626, ஜயசுந்தர 91132, சத்துரங்க 86178 ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரே இந் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வவுணதீவு பிரதேசத்திலுள்ள மாவிலங்கையடிசேனை பகுதியில் இயந்திர வாளினால் முதிரை மரங்களை வெட்டியபோது நபர் ஒருவரும், குருந்தையடி முன்மாரி மற்றும் ஊத்துமடு போன்ற டிப்பர், உழவு இயந்திரம் போன்றவற்றில் அனுமதிப்பத்திரம் இல்லாது சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட போதும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களையும்  குறித்த வாகனங்கள், மரக்குற்றிகள் போன்றவற்றையும்  நீதிமன்றில் ஆஜர்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி  தெரிவித்தார்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours