(எஸ். சதீஸ் )

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிரான்  பகுதியில் உள்ள சமூக ஆர்வலரான குருசுமுத்து லவக்குமார்  தனக்குச் சொந்தமான சுமார் 15 ஏக்கர் காணியினை காணியற்ற வறிய குடும்பங்களுக்கு  கடந்த சித்திரை புது வகுத்தன்று இலவசமாக பகிர்ந்தளித்துள்ளார்.

இந்த புதிய குடியேற்றக் கிராமத்திற்கு லவன் எழுச்சிக் கிராமம் என பெயரிட்டு, தமது குடிசைகளை அமைத்த மக்கள் வெள்ளிக்கிழமை சம்பிரதாய முறைப்படி பால் பொங்கி குடிபுகுந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டம் பூராகவுமுள்ள கிராமங்கள் தோறும் காணியற்ற குடும்பங்களை இனங்கண்டு ஒரு குடும்பத்திற்கு தலா பத்து பேர்ச்  வீதம் 224 பேருக்கு இவர் சொந்தக் காணியினை பகிர்ந்தளித்துள்ளதுடன் முதற்கட்டமாக இரு பொது குடிநீர் கிணறுகளையும் அமைந்துக் கொடுத்துள்ளார்.

தனது சொந்த (பரம்பரை) காணியினை மக்களுக்கு  இலவசமாக பகிர்ந்து வழங்கிக் கொண்டிருக்கையில் அரசியல்வாதிகளாலும் அரச அதிகாரிகளாலும் தனக்கு அச்சுறுத்தல் வருகின்றது எனவும், இருந்தபோதிலும் தமிழ் மக்களுக்காக தான் யாருடைய மிரட்டலுக்கும் அடிபணியப் போவதில்லை எனவும் லவக்குமார் இந் நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்தார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours