( வி.ரி.சகாதேவராஜா)


த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  எம்.ஏ. சுமந்திரன் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் தெய்வாதீனமான உயிர்தப்பியுள்ளார்.
நேற்று(30) வெள்ளிக்கிழமை  காலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அவரின் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது எனினும் சுமந்திரனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

சுமந்திரன் பயணித்த வாகனம் கடுமையாக விபத்துக்குள்ளானதில் முழுமையாக சேதமடைந்துள்ளது.

மழை பெய்து கொண்டிருந்த போது அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வாகனம் வீதியில் வழுக்கி பலமுறை உருண்டு விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும் வேறு வாகனம் ஒன்றின் மூலம் அவர் கல்முனையை வந்தடைந்தார்.
அங்கு நீதிமன்றுக்கச்சென்று மேலும் பல சந்திப்பகளிலும் கலந்துகொண்டிருந்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours