(வி.ரி.சகாதேவராஜா)

கோமாரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எரிவாயுசிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் தடம்புரண்டு சேதத்திற்குள்ளானது.

இச்சம்பவம்இன்று(9)ஞாயிற்றுக்கிழமை காலை 10.40மணியளவில் கோமாரி பாலத்தில் இடம்பெற்றுள்ளது..

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தின் ரயர் பாலத்தடியில்வைத்து வெடித்தகாரணத்தினால் வாகனம் தடம்புரண்டு இவ்விபத்து இடம்பெற்றதாகக்கூறப்படுகிறது.

திடீரென ஏற்பட்ட நிலைமையை சமாளிக்க சாரதி திடீர் பிரேக் போட்டதும் பாலத்தினுள் விழாமல் காப்பாற்றப்பட்டது. எனினும் சிலிண்டர்கள் வீதியில் வீழ்ந்து சிதறின. அதிஸ்டவசமாக எதுவும் வெடிக்கவில்லை அத்துடன் சாரதிக்கோ உதவியாளருக்கோ எவ்வித பாதிப்புமில்லை என நேரில் கண்ட பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன் தெரிவித்தார்.

வீதியால் அப்போது வாகம் குறைவு என்பதால் ஏனைய வாகனங்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை. எனினும் சிறிதுநேரலம் பொத்துவிலுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
பொத்துவில் பொலிசார் நேரடியாக ஸ்தலத்திற்குவிரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours