கல்முனை பொலிஸ் பிரிவு உட்பட்ட கிரீன் ஃபீல்ட் தொடர்மாடி யில்  மாவட்ட புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஹெரோயின் 17.80g அளவிலான ஹெரோயின் போதைப் பொருள் சுமார் இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் பெறுமதியான ஹெரோயினை கல்முனை பொலிஸார் கைப்பற்றினர்.


நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின்  கட்டளையின்படி போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அருணன்  மற்றும்  உள்ளிட்ட பொலிஸார்  ஒன்றாக இணைந்து சுற்றி வளைத்து தந்தை மற்றும் மகன் இருவரையும் கைது செய்து செய்துள்ளனர்.

 நாளை அவர்களை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளளனர்.  இவ்வாறான போதைப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் அவற்றை வாங்கி உபயோகிப்பவர்கள் சம்பந்தமாக தகவல் ஏதும் கிடைக்கப் பெற்றால் கல்முனை  பொலிஸ் நிலையத்திற்கும் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கொள்ளப்படுகின்றது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours