(வி.ரி.சகாதேவராஜா)
த.தே.கூட்டமைப்பு யாழ்.பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் நேற்று(30)வெள்ளிக்கிழமை கல்முனைக்கு விஜயம் செய்தார்.
கல்முனை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற பொத்துவில் பொலிகண்டி வழக்கில் ஆஜராகினார்.
பின்னர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் உடனான சந்திப்பொன்று  நடைபெற்றது.
சந்திப்பின்போது த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான த.கலையரசன் இரா.சாணக்கியன் கோ.கருணாகரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான  பா.அரியநேத்திரன்  சீ.யோகேஸ்வரன் காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மாணவர்மீட்புபேரவைத்தலைவர் செ.கணேஸ் பிரமுகர் செ.புவிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அங்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக அங்கு விரிவாக ஆராயப்பட்டது.அண்மையில் அறிவிக்கப்பட்;ட தரங்குறைப்பு பற்றியும் ஆராயப்பட்டது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours