(ஷமி)


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த இருவரது உடலங்களில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவின் படி கொரணாத் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதாவது களுவாஞ்சிக்குடி மற்றும் ஏறாவூர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மரணமான இரு உடலங்களை பிரேத பரிசோதனை நடாத்துவதற்கு  முன்னர் பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவ் இரு உடலங்களிலும் கொரணாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவின் குருமண்வெளிப் பிரதேசத்தில் திடீரென மரணமடைந்த 60 வயதுடைய நபருக்கும்  ஏறாவூர் பகுதியில் கிருமிநாசினி அருந்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த 45 வதுடைய இருவருக்கும் கொரணாத்தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மரணமடைந்தவர்கள் வசித்த பிரதேசங்கள் பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் முடக்கப்பட்டுள்ளது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours