கல்முனை மாநகர சபை வாகனத்தில் மலசல கூடக் கழிவுகள் ஏற்றப் பட்டு கல்முனை பொதுநூலகத்திற்கு பின்புறமாக அமைந்திருக்கின்ற கல்முனை வெளி பெரியகுளத்துக்குள் கழிவுகள் கொட்டப்படுவதனால் பாரிய சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுவதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் எஸ்.சந்திரசேகரம் தெரிவித்தார.;

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் 

கடந்த காலங்களில் கிராமங்களில் சேகரிக்கப்பட்ட  மலசலகூடக் கழிவுகளை வௌ; வேறு இடங்களிலே கொட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நாட்களில் விவசாயத்திற்கு  நீரைப் பயன்படுத்தும் குளத்துக்குள் 24 ஆம் திகதி  திங்கட்கிழமை  இரகசியமாக  இக்கழிவுகள் கொட்டப்படுவதனை அறிந்த  நான் அங்குசென்று அதனை தடுத்து நிறுத்தினேன்.

 ஏன் எனில் இக்குளத்தில் இருந்து விவசாயத்திற்கு கல்முனை வெளிக்கண்ட விவசாயிகள்  அவ் நீரைப் பயனபடுத்துகின்றனர்; மற்றும் மீனவர்கள் மீனைப்பிடித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்துவருகின்றனர். 

இவ்வாறான நிலையில் கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான வாகனத்தில் இக்கழிவை ஏற்றிக்கொண்டு இரகசியமாக கொட்ட முனைவதனை நிறுத்தி மக்களை தொற்று நோயில் இருந்து பாதுகாக்க நடவடிக்கையினை கல்முனை முதல்வர் எடுக்கவேண்டும்.

இன்று காலை கழிவு கொட்டப்படுவதனை அறிந்த நான் அதனை உடனடியாக நிறுத்தினேன். அவர்கள் அங்கிருந்து வேறு இடங்களில் கொட்டுவதற்காக வாகனத்தினை எடுத்துச்சென்றனர் அப்போது நான் முதல்வரை பலமுறை தொடர்புகொண்டபோதும் பதில் கிடைக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தினார.; 

அதேவேளை கல்முனை மாநகரசபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி காரியப்பர் அவர்களிடம் நிலைமையினைத் தெரியப்படுத்தினேன் அவர் அவ்விடத்திற்கு வருகைதந்து கொட்டுவதனை  நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார்;. அதேபோன்று பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அவர்களிடமும் தெரியப்புடுத்தியுள்ளேன் என்றார்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours