(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் பற்றை காடாக காணப்பட்ட மணல் வீதியொன்று செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டுள்ளது.

இவ்வாறாக மூன்று தசாப்த காலமாக செப்பனிடப்படாமல் இருந்த வீதி கிறவல் இடப்பட்டு போக்குவரத்திற்கு உகந்த முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மணல் வீதியில்லா மாநகரம் எனும் திட்டத்தின் கீழ் கல்லடி விநாயகர் வீதியினையும் அரசாங்க விடுதி வீதியினையும் இணைக்கும் இவ் மணல் வீதியே இவ்வாறு செப்பனிடப்பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவனின் முன்மொழிவிற்கு அமைவாகவே 30 வருடங்களின் பின்னர் இவ்விதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டுள்ளது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours