நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,சுவிட்சர்லாந்தின் ஒரு பகுதி திங்கள் முதல் இயல்பு வாழ்வுக்கு மீளத் திரும்பவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில்,நடன விடுதிகளும், உல்லாச விடுதிகளும் தொடர்ந்து முடக்கத்தில் இருந்தபோதும், தனியார் விழாக்கள் வீடுகளில் 30 விருந்தினர்களுடனும், வெளி இடங்களில் 50 விருந்தினர்களுடனும் நடைபெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்,பொதுவிழாக்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆகக்கூடியது 300 பொதுமக்கள் பார்வையாளர்களாக்கொண்டு நடைபெறலாம்.ஆடவைத் திங்கள் (யூனி 2021) நிறைவில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours