மேலும் 12 மாவட்டங்களில் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தும் செயல்பாடுகள் நாளை ஆரம்பிப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, மாத்தளை , நுவரெலியா, கேகாலை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை , பதுளை , அனுராதபுரம் , புத்தளம் , அம்பாறை , மட்டக்களப்பு, மொனராகல மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் நாளை முதல் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
இந்த மாவட்டங்களில் தடுப்பூசி திட்டங்களைத் தொடர நேற்று ஒரு மில்லியன் குப்பி சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.
மேலும் ஒரு மில்லியன் குப்பி சினோபார்ம் தடுப்பூசிகள் ஜூன் 9 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours