(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு பிரம்படித்தீவு, முருகன்தீவு, சாராவெளி கிராமங்களில் வசிக்கும் மிகவும் கஸ்டத்தில் வசிக்கும் 125 வரிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தினக்கூலி வேலை செய்து தமது வாழ்வாதாரத்தை பிழைக்கும் மக்கள் இன்றைய பயணக் கட்டுப்பாடு காரணமாக மூன்று நேர உணவை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் பலர் உள்ளனர்.
இத்தகைய நிலையில் உள்ள பிரம்படித்தீவு, முருகன்தீவு, சாராவெளி கிராமங்களில் வசிக்கும் மிகவும் கஸ்டத்தில் உள்ள 125 குடும்பங்களுக்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு கிளை தலைவர் எம்.வசந்தராஜா மட்டக்களப்பு ஆதீனத்தின் தலைவர் ஜெயபால் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இன்று(18)அங்கு வாழும் 125 வரிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இக் கருணையுள்ள காரியத்தை மேற்கொண்ட அனைவரையும் மனித துயர் துடைப்போம் அமைப்பு பாராட்டியது.





Post A Comment:
0 comments so far,add yours