நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.பைசல் அவர்களின் தலைமையில் இன்று இரவு ஒலிபெருக்கியில் கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

இந்த தடுப்பூசியானது முதற்கட்டமாக 60 வயதை தாண்டியவர்கள் மற்றும் பொது மக்களுடன் கள நேரடி தொர்பினை வைத்திருக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இணைப்பு செய்யப்பட்ட பல்நோக்கு அபிவிருத்தி பயிலுநர்களும் கலந்து கொண்டனர். 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours