(சா.நடனசபேசன்)

கோவிட் 19 தொற்று அதி தீவிரமாக பரவிவருவதனால் தற்போது நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்களுக்கு களுதாவளை பிரதேசசபை உறுப்பினரும் சமூகசேவகருமான வினோ அவர்களால் 300 பேருக்கு  உலர் உணவுப் பொதிகள் வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

அதவது ஓந்தாச்சிமடம் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் மக்களுக்கும் களுவாஞ்சிக்குடி ஆட்டோ சங்கத்தினருக்கும் சேர்த்து மொத்தம் 200 பேருக்கான உதவி அவர் மூலம் வழங்கிவைக்கப்பட்டது

இவர் கடந்த காலங்களில் கொவிட் 19 காரனத்தினால் நாடு முற்றாக முடக்கப்பட்ட வேளையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

தற்போது பல கிராமக்களுக்கு இவ் உதவியினை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதுடன் முதல் கட்டமாக  2000 பேருக்கான உதவி விரைவில் வழங்கிவைக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours