( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழுவின் அனுமதியின் அடிப்படையில் கல்வியமைச்சின் செயலாளரினால் உடன் செயற்படும் வண்ணம் அம்பாறை மாவட்டத்தில் அதிபர் வெற்றிடம் நிலவிய நான்கு தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் சேவை முதலாம் வகுப்பைச் சேர்ந்த பா.சந்திரேஸ்வரன் திருக்கோவில் வலயத்திலுள்ள தம்பிலுவில் மத்தியமகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் அதிபராக இருந்தவர்.
இலங்கை அதிபர் சேவை முதலாம் வகுப்பைச் சேர்ந்த எம்.ஜ.மாஹிர் சம்மாந்துறை வலயத்திலுள்ள இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சம்மாந்துறை அறபா வித்தியாலய அதிபராகவிருந்தவர்.
இலங்கை அதிபர் சேவை முதலாம் வகுப்பைச் சேர்ந்த டேவிட் அமிர்தலிங்கம் திருக்கோவில் வலயத்திலுள்ள அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் அக்கரைப்பற்று இ.கி.மிசன் பாடசாலை அதிபராகவிருந்தவர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று கல்வி அமைச்சில் வழங்கப்பட்டன.

Post A Comment:
0 comments so far,add yours