(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு செங்கலடி கறுத்தபாலத்தில் இராணுவ டிரக் வண்டி மோதிய விபத்தில் இரண்டுபேர் ஸ்தலத்தில் உயிரிழப்பு.4 பேர் படுகாயம்.மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் வீதியைவிட்டு விலகி சென்று பாலத்திற்கு அருகில் உள்ள பாலத்தில் கீழே நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இராணுவத்தினர் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன்;மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(24) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி-பதுளைவீதி வீதியிலுள்ள கறுத்தப்பாலத்திற்கு அருகிலுள்ள பாலத்தில் கரடியனாறு பிரதேசத்தில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி இராணுவத்தினர் இராணுவ ரக்வண்டியில் சம்பவதினமான (25) பிற்பகல் 4 மணிக்கு இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு பிரயாணித்தபோது கறுப்பு பாலம் அருகில் ரக்வண்டி வேகக்கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்கு கீழ் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் சென்ற இருவர் இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதேவேளை நீரோடையில் இருந்து ரக்வண்டியை கரைசேர்க்கும் நடவடிக்கையில் கனரக வாகனம் கொண்டு இராணுவத்தினர் ஈடுபட்டுவருவதுடன் ஒருவரின் சடலத்தை தேடிவருவதாக தற்போது அங்கிருந்து தகவல் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



Post A Comment:
0 comments so far,add yours