தேங்காய்களைத் திருடிய இருவரை, தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மடக்கிப் பிடித்து, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் அமைந்துள்ள தென்னந்தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் மூவர் இணைந்து தேங்காய்களைத் திருடிய போது, இருவர் வசமாக சிக்கியுள்ளனர்.
தனது தோட்டத்தில் தொடர்ந்தும் தேங்காய்கள் திருடப்படுவதாகவும் அதனைக் கண்காணித்த போது இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பொதுமக்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்ததாக தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு திருடப்பட்ட 52 தேங்காய்களுடன் இரு நபர்களையும் வாழைச்சேனை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours