.
( வி.ரி.சகாதேவராஜா)
கொரோனாத் தொற்று அதிகரித்த காரணத்தினால் கடந்த 4ஆம் திகதி முடக்கப்பட்ட புதிய வளத்தாப்பிட்டிக் கிராம மக்களுக்கு நேற்று (8) செவ்வயாக்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட 29குடும்பங்களுக்கான 5000ருபா பெறுமதியான உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டனன என்று சம்மாந்துறைப்பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனிபா தெரிவித்தார்.
மேலும் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவில் கொவிட் 19 நோய்த்தாக்கத்தினால் முடக்கப்பட்ட புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் வசிக்கின்ற 136 சமுர்த்தி பயனுகரிகளுக்கு பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கு அமைவாக நேற்றுமுன்தினம் பிரிவுக்கு பொறுப்பான உத்தியோகத்தா் எஸ்.நவநீதகுமாரிடம் நலனுதவி கொடுப்பனவிற்கான நிதியினை உதா சமுா்த்தி வங்கியில்வைத்து கையளித்தனர். அக்கொடுப்பனவு நேற்று உரிய பயநுகரிகளுக்க பணமாக வழங்கப்பட்டது.
முடக்கப்பட்ட புதிய வளத்தாப்பிட்டிக்கிராமத்தை 24மணிநேரமும் கண்காணிப்பதற்கென பழையவளத்தாப்பிட்டியில் கிராமசேவையாளர் ரவி தலைமையில் பிரதேசசெயலக ஊழியர்கள் ஜவர் நியமிக்கப்பட்டு மக்களது தேவைகளை வழங்கி கண்காணித்துவருகின்றனர்.தவிர புதிய வளத்தாப்பிட்டிக்கிராமத்துள் கொவிட் கிராமமட்டக்குழுவும் இயங்கிவருகின்றது.
பிரதேச செயலாளர் ஹனிபா மேலும் கூறுகையில்:
அம்பாறை நகரிலிருந்து கிழக்காக 9கி.மீற்றர் தொலைவில் அம்பாறை காரைதீவு பிரதானவீதியில் அமைந்துள்ளது. சம்மாந்துறை பிரதேச செயலகப்பரிவில் 52கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன. அவற்றுள் வளத்தாப்பிட்டி கிராமசேவையாளர் பிரிவு என்பது 1200குடும்பங்களைக் கொண்டது.
இக்கிராமசேவையாளர் பிரிவில் புதிய வளத்தாப்பிட்டி பழைய வளத்தாப்பிட்டி பளவெளி இஸ்மாயில்புரம் எனும் நான்கு கிராமங்கள் வருகின்றன.
இந்நான்கு பிரிவுகளில் ஒன்றான புதியவளத்தாப்பிட்டிக்கிராமத்தி ல் 450குடும்பங்கள் வருகின்றன அங்கதான இந்த கொரோனாத் தாக்கம் தீவிரமாகி இன்று 63தொற்றாளர்களின் இனங்காணலுடன் முடக்கப்பட்டிருக்கின்றது.அங்கு ஒரு மரணமும் சம்பவித்திருக்கின்றது.
மக்களுக்குத் தேவையான அடிப்படையான உணவுப்பொருட்களை வழங்குவதற்கு கடந்த 3நாட்களாக அங்கு மரக்கறி மீன் விற்பனையாளர்கள் சிலருக்கு அனுமதி வழங்கியிருந்தோம். அவர்கள் பணத்திற்கு அவற்றைப்பெற்றுக்கொள்வதற்கு அது வசதியாகவிருந்தது.எனினும் அங்குள்ள மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் வசதிகுறைந்த நிலையிலிருப்பதால் 7நாட்களுள் வழங்கப்படவேண்டிய அரசின் 5ஆயிரம் ருபா பெறுமதியான உலருணவுப்பொதிகளை வழங்கப்பட்டள்ளன.
இக்கராமம் முடக்கப்பட்nருப்பதால் கொரோனவுக்குரிய அரசின் 5000ருபா கிடைக்கவாய்ப்பில்லை.ஆனால் சமுர்த்திக்கொடுப்பணவு வழங்கப்படும் அத்துடன் முடக்கத்திற்குரிய வருமானம்குறைந்தவர்களுக்கான 10000ருபா பெறுமதியான இரு உலருணவுப்பொதிகள் 7நாட்கள் வித்தியாசத்தில் வழங்கப்படும்.இதைவிட முடக்கப்பட்ட பிரதேசத்தினுள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு வருமான வரையறை பார்க்காமல் அனைவருக்கும் அதற்கான 5000ருபா வீதம் இருகொடுப்பனவு உலருணவாக வழங்கப்படும்.அது நேற்று வழங்கப்பட்டது.
அங்குள்ள அரசஊழியர்கள் என்றாலும் அவர்கள் ஆரம்பகட்ட ஊழியர்கள் என்பதால் சம்பளம்குறைவு. இடம்பெயர்ந்து மீள்குடியேறியிருப்பதால் கடன்பெற்று தெவைகளை செய்வதனால் சம்பளம் மேலும் குறைவு. அதுமாத்திரமல்ல நாட்கூலியுடன் கடமையாற்றும் அரசஊழியர்களுமுள்ளனர்.இவர்களையி ட்டு அரசஅதிபரோடு பேசி ஏதாவது பெற்றுக்கொடுக்கலாமா என்பதையிட்டு கலந்துரையாடிவருகின்றோம்.







Post A Comment:
0 comments so far,add yours