கசிப்பு காய்ச்சும் தொழிலில் ஈடுபட்ட நிலையில் (12)  மாலை வாகனேரி பிரதேசத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசிஆலை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அவர்களுடன் வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்து, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் தட்டாவெளி அக்கரானை பகுதியில் நடாத்திய சோதனையின் போதே இந்த இரண்டு  சந்தேக நபர்களும், அவர்களிடம் இருந்து கசிப்பு காய்ச்சுவதற்காக பயன்படுத்தக்கூடிய  கோடா 420 லீற்றரும் ஸ்பிரிட் 20 லீற்றரும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் 26 மற்றும் 20 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours