(சா.நடனசபேசன்)

இன்று நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்களுக்கு களுதாவளை பிரதேசசபை உறுப்பினரும் சமூகசேவகருமான வினோ அவர்களால் அரிசி மற்றும் மரக்கறிகள் 300 பேருக்கு 17 ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

அதவது தேற்றாத்தீவு குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் களுவாஞ்சிக்குடி சூரையடியில் வசிக்கும் மொத்தம் 300 பேருக்கான உதவி அவர் மூலம் வழங்கிவைக்கப்பட்டது


இவர் கடந்த காலங்களில் கொவிட் 19 காரணத்தினால் நாடு முற்றாக முடக்கப்பட்ட வேளையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது


தற்போது பல கிராமக்களுக்குஇவர் இவ் உதவியினை தொடர்ச்சியாக வழங்கிவருகின்றார்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours