நூருல் ஹுதா உமர்

கொரோனா அலை பெருந்தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் முடக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதி வழங்கும் செயற்றிட்டம் கல்முனையன்ஸ் போரத்தினால் கடந்த இரு நாட்களாக (14,15) முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா  ப்ரதர்ஸ்  பிஸ்னஸ் போரத்தினால் கல்முனையன்ஸ் போரத்திற்கு கிடைக்கப்பெற்ற ஏழு லட்சம் ரூபாய் பெறுமதியான உதவியிலிருந்து அரிசி ,கோதுமை மா, சீனி, பருப்பு, பால்மா, ரவை, மெக்ரோணி, தேயிலை தூள் போன்ற உணவுப்பொருட்கள் அடங்கிய 200 உலர் உணவுப்பொதிகளும் கல்முனை, இஸ்லாமபாத் போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்கள் இணங்காணப்பட்டு வழங்கப்பட்டன. இதில் பள்ளிவாசல்களில் கடமை புரியும் தெரிவுசெய்யப்பட்ட மெளலவி, முஅத்தீன்மார்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours