(க.விஜயரெத்தினம்)

கொரோனோ தொற்றுக்குள்ளானவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பேரூந்து மற்றுமொரு பிக்கப்புடன் மோதுண்டு பெரியகல்லாற்றில் விபத்து.

கம்பஹா மாவட்டத்திலிருந்து  ஒரு தொகுதி கொரோனோ தொற்றுக்குள்ளானவர்களை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு பாதையூடாக அம்பாறைக்கு சென்ற தனியார் பேரூந்தானது பெரியகல்லாறு பிரதான வீதியில் எதிரே வந்த அரச திணைக்கள  பிக்கவுடன் மோதி விபத்துள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பிரதான வீதியில் இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை(21)காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 27 கொரோனோ நோயாளிகளை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு பாதையூடாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சிசிச்சை அளிப்பதற்கு இராணுவத்தின் பாதுகாப்புடன்  கொண்டு சென்ற தனியார் பேரூந்தானது கரையோர நீர்வாழ் உயிரினவளர்ப்பு திணைக்களத்தின்  மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளரை  கல்முனையிலிருந்து ஏற்றிக்கொண்டு சென்ற பிக்கப்புடன் மோதுண்டே விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தினால் தனியார் பேரூந்தும்,மற்றும் திணைக்கள பிக்கப் வாகனமும் பகுதியளவில் சேதமேற்பட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த எந்தவொரு நபருக்கோ,கோரோனோ நோயாளிகளுக்கோ சிறுகாயம் ஏற்படவில்லை என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.இவ்விபத்து சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours