வி.ரி.சகாதேவராஜா)


சமகால கொரோனா பயணத்தடை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பட்டினி நிலைமைக்குச்சென்ற மக்களுக்கு  சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உலருணவுப் பொதிகளை வழங்கிவருகிறார்.

பாதிக்கப்பட்ட திராய்க்கேணி;;க்கிராமத்தில் நலிவுற்ற 50 குடும்பங்களுக்கு   ஒருதொகுதி உலருணவு நிவாரணங்களை சுகாதாரநெறிமுறைக்கிணங்க அவர் வழங்கிவைத்தார்.

கனடாவைச்சேர்ந்த  அமரர் திருமதி இரட்ணமாலா பளவகாந்தனின் இரண்டாவது வருடமறைவுநிறைவையொட்டி இவ்வுலர் உதவிநிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது.

பயணத்தடையால் நாளாந்த கூலித்தொழிலை இழந்து வாழ்வாதாரத்தை பூரணமாக இழந்து உண்பதற்கு எதுவுமே இல்லாத நிலையிலிருந்த இவர்களை இனங்கண்டு வழங்குவதற்கு கனடாவைச்சேர்ந்த பவளகாந்தன் உதவியிருந்தார்.

அதேபோல் அப்  பிரதேசங்களிலுள்ள  வலதுகுறைந்தோருக்கும் இத்தகைய உலருணவுப்பொதிகளை தவிசாளர் ஜெயசிறில் தனது உறவுகளின் பங்களிப்புடன் வழங்கிவைத்தார்.
இத்தகையை நெருக்கடியான காலகட்டத்தில்  காலத்தில் இத்தகைய உதவியை செய்தமைக்காக தமது நன்றிகளை தெரிவிப்பதாக மக்கள் கூறினர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours