.

( வி.ரி.சகாதேவராஜா)

'காரைதீவு 1967ஆம் ஆண்டு நண்பர்கள் குழாம்' என்ற அமைப்பினர் அம்பாறை மாவட்டத்தில் கொடிய கொரோனாவால் வாழ்வாதரத்தையிழந்த மல்வத்தைப்பிரதேசத்திலுள்ள மல்லிகைத்தீவு கிராம மக்களுக்கு ஒரு தொகுதி உலருணவு நிவாரணங்களை வழங்கிவைத்தனர்.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா வாழ் காரைதீவு 1967 நண்பர்கள் குழாத்தினரின் அனுசரணையின்கீழ் இவ்வுலருணவு நிவாரணம் வழங்கப்பட்டது.

1967ஆம் ஆண்டு பிறந்த இந்த அமைப்பின் தலைவர் செ.மணிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் 1500ருபா பெறுமதியான உலருணவுப் பொதிகளை மல்லகைத்திவீலுள்ள 80குடும்ஙகளுக்கு வழங்கிவைத்தனர்.

இதேவேளை இதேகுழுவினர் காரைதீவிலுள்ள பின்தங்கிய பிரதேச 50குடும்பங்களுக்கும் பொதிகளை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours