கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வீட்டிலிருந்தவாறு சமய வழிபாடுகளில் ஈடுபடுமாறு வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொசன் பூரணை தினமான இன்று (24) காலை தங்காலை கால்டன் இல்லத்தில் சில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

தங்காலை வனவாசி குடா விகாரையின் வணக்கத்திற்குரிய பொல்வத்தே பேமானந்த தேரரினால் சில் வழிபாடு நடத்தப்பட்டது.
 
பௌத்த சமயத்தின் சிறந்த உள்ளர்த்தத்தை சரியாக உணர்ந்து, புத்த பொருமானின் தத்துவத்திற்கு ஏற்ப எதிர்கால வாழ்க்கையை திட்டமிடுவதற்கு இந்த காலப்பகுதி மிகவும் முக்கியமாகும் என கௌரவ பிரதமர் பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து செய்தியிலும் குறிப்பிட்டிருந்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours