பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.


பொது மக்கள் அலுவலக நேரங்களில் 0707 677877 என்ற இலக்கத்தின் மூலம் திணைக்களத்தை தொடர்பு கொண்டு நியமனங்கள் மற்றும் தொடர்புடைய விடயங்கள் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

வாட்ஸ்அப், வைபர் அல்லது எஸ்.எம்.எஸ். செய்திகள் மூலமாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

திணைக்களத்தில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours