நூருள் ஹுதா உமர்
அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட வீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான துறைசார் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் (21)அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல் நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, மாநகர சபை உறுப்பினர்கள், தேசிய காங்கிரஸ் தலைவரும், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.வஃஸீர், அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் எம்.ஐ.அஹ்மத் சஜீர், மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.



Post A Comment:
0 comments so far,add yours